-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பரிசுத்த வேதாகமத்தில் "சேலா (Selah)" என்பதின் அர்த்தம் என்ன?

பரிசுத்த வேதத்தில்"சேலா"  என்பதின் அர்த்தம்

பரிசுத்த வேதத்தில் 71 முறை "சேலா" என்ற சொல் வருகிறது. இணைத்துப் பார்த்தல் என்பது இதன் அர்த்தமாகும். அதாவது, இரண்டு கருத்துக்களை இணைக்கிறது.

 


சேலாஎன்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவையாவன,

1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல்.

2.பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது அல்லது பாடிக்கொண்டிருப்பவரை பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவேண்டும் என உணர்த்த "சேலா"என்ற சொல் பயன்படுத்தப்படும்.

3.எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது.

4.திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் அல்லது திரும்பத் திரும்ப அதையே சொல்லவேண்டும் என்பதை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

5.மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் அல்லது  மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்பதை குறிக்கவும் சேலா பயன்படுத்தப்படலாம்.

6.ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல்.(உதாரணமாக: நன்றி ராஜா.... நன்றி ராஜா....”)

7.பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச்சொருகல் அல்லது பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இசையை இடைச் சொருகல் செய்யவேண்டும் என்பதை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

சங்கீதத்தில் "சேலா" என்பதின்  அர்த்தம்


Meaning of Selah in Book of Psalms in the Bible

சங்கீதங்களை நீங்கள் படிக்கும்போது இடையிடையே சேலா என்கிற வார்த்தை வரும். இந்த சேலா என்பது ஓர் சங்கீதத்தில் ஒன்றுக்கு  மேற்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருந்தால் அக்கருத்துக்களின் முடிவில் குறிக்கப்பட்டிருக்கும். சேலா என்று வந்துவிட்டால் இதுவரை சொன்ன கருத்துக்கள் முடிந்து அடுத்த கருத்து ஆரம்பிக்கிறது என்று பொருள்

இன்னும் சில இடங்களில் இசை நயம் கருதி இரண்டு முறை திருப்பி படிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவும் சேலா என்ற குறியைப் பயன்படுத்துவர்

வாசிக்கும்போது காற்புள்ளி,  முற்றுப்புள்ளி அடைப்புக்குறி ஆகியவற்றை எப்படி வாசிக்க மாட்டோமோ அப்படியே சேலா என்பதை வாசிக்கக்கூடாது (சேலா).

Selah - pause, reflect, praise


 

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்